OnlinePJ

Thanks for Visiting my Page

செவ்வாய், 17 மார்ச், 2015

இந்தியா கிரிக்கெட்டும், திருந்தாத கிறுக்கர்களும்

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பது இன்றைய தலைமுறை மறந்திருக்கும். ஆனால் உண்மை என்னவென்றால் அது மறக்கடிக்கப்பட்டிருக்கு என்பதுதான்.

உலகில் இன்று பல நாடுகள் கிரிக்கெட்டில் கால்பதிக்க துவங்கிவிட்டன ஆனால் அப்படி ஒன்றும் பெரிதாக சாதிக்க முடியவில்லை. இந்த கிரிக்கெட்டில் உண்மையிலேயே ரொம்ப விறுவிறுப்பான போட்டி என்னவென்றால் அது ஆஸ்திரேலியா அணியினருக்கும் இங்கிலாந்து அணியினருக்கும் இடையே நடக்கும் ஆஷஸ் என்னும் போட்டிதான். இது தான் ரொம்ப உணர்வுபூர்வமா இருக்கும். ஆனால் பாருங்க இந்தியாக்கும் பாகிஸ்தானுக்கும் நடப்பதுதான் ரொம்ப உணர்வுப்பூர்வமானது போல காட்டுவாங்க.

மக்களின் பகைமை உணர்வை தூண்டிவிட்டு  அதில் பணம்ப்பார்க்கும் ஒரு மாணம்கெட்ட பிறவிகள்....!!!!!!!!!

 நீங்க நல்லா ஒரு விஷயத்தை கவனித்தால் விளங்கும் இவர்கள் எப்படி எல்லாம் மக்களின் உணர்வுகளோடு விளையாடுகிறார்கள் என்று, இவர்களுக்கு எதிராக விளையாடும் எந்த அணியாக இருந்தாலும் அட அது ஒரு சப்பை அணியாக இருந்தாலும், இவர்களும் இவர்களின் முன்னோடிகளும் குடுப்பாங்க பாருங்க ஒரு பேட்டி ஆஹா அந்த சப்பை அணியை ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா அளவிர்க்கு பேசுவாங்க அது மட்டுமில்லை இவர்களுக்கு விளக்கு பிடிக்கும் மீடியா இருக்கே என்னமோ இவனே நேராப்போய் பேட்டி எடுத்த மாதிரி அந்த அணியின் தலைவர் அப்படி பேசினான், இப்படி பேசினான் அப்படி இப்படினு போட்டு அதை திருப்பி திருப்பி தனது செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பி பார்க்கின்ற மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு போட்டியை காணக்கூடிய நேரத்தில் இவர்கள் எதிரணியினரை வாய்க்கு வந்தப்படி திட்டுவதையும் நாம் கண்கூடாக பார்க்கின்றோம்.

 இவர்கள் இப்படி செய்வதால்தான் இந்தியா விளையாடும் எல்லாப்போட்டிகளும் போட்டியாக இல்லாமல் எல்லாம் வெறிப்பிடித்தது போல் ஆக்கப்படுகின்றது. மொத்தத்தில் இவர்கள் சம்பாதிக்க இவர்களின் எதிர் அணியினர் அவர்கள் யாராக இருந்தாலும் மிகப்பெரிய ஒரு எதிரியாக பார்க்கப்படுகிறார்கள் ஏன் அதையும் தாண்டி ஒரு துரோகியாக பார்க்கபடுகிறார்கள் கேட்டால் தேசப்பக்தியாம்.

 

உண்மையிலேயே உலகில் உள்ள நிறவெறி அதிகம் காண்பிக்கப்படுவது இந்தியாவில்தான் அதில் முதன்மை வகிப்பது இந்த கிரிக்கெட் மோகம். இப்படி மக்களின் பகைமை உணர்வை தூண்டிவிட்டு வேடிக்கைப்பாற்பதற்க்கு பதில் இதே போல வேடிக்கைப்பார்க்கின்ற தொழில் ஒன்று இருக்கு அதை செய்யலாம்...!!!!!!!!!!!!

 

புரிந்தவர்கள் புரிஞ்சிப்பாங்க.       

 

கருத்துகள் இல்லை: