OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 25 மார்ச், 2015

ஆப்ரஹாம் பெஞ்சமின் டிவில்லியர்ஸ்...!!!!!!!!!!!!

தோனி மாதிரி ஆட்டத்தில் தோற்றுவிட்டு, பந்துவீச்சாளர்களையும், மட்டைவீச்சாளர்களையும், மேலும் ஆடுகளாதையும் மழையையும் குறை சொல்லி தப்பிக்காமல்....!!!!!!!!!

தான் தவறிழைத்த ரன் அவுட் வாய்ப்புதான் காரணம் என்று தன்னால் தோல்வி என்று ஒத்துக்கொண்டே பாரு அங்கேதான் உன் பெருந்தன்மை இருக்கு...!!!!!!!!!!!!!

ஆட்டத்தில் தோற்றாலும், ஆளுமையில் வென்றுவிட்டாய்....!!!!!!!!!!!!!




HATS-OFF AB...!!!!!!!!!!!!!!!!!!!

ஞாயிறு, 22 மார்ச், 2015

பின் தள்ளப்பட்ட பிரச்சனைகள்

மறதி என்பது ஒரு தேசிய வியாதி என்பது பலரால் பல நேரங்களில் சொல்லப்பட்ட சொல்லப்பட்டு கொண்டிருக்கிற வார்த்தை தான்.  என்னை பொறுத்தவரை அது தேசிய வியாதி இல்லை. உலகளாவிய வியாதி.

ஒரு நிகழ்வை அல்லது ஒரு செய்தியை மறப்பது அல்லது திட்டமிட்டு மறக்கடிக்க படுவது என்பது வேறு. ஆனால் சில செய்திகளை மறக்கவோ  அல்லது மறக்கடிக்கபடுவதை விட விசித்திரமான சூழ்ச்சி எதுவென்றால் மக்களை அது பற்றி சிந்திக்கவோ அல்லது குறைந்த பட்சம் அது பற்றி பேசுவதை கூட அனுமதிக்காத அளவுக்கு வேறு ஒரு விஷயத்தை அல்லது நிகழ்வை கொண்டு நீர்த்து போக செய்வதுதான்.

அப்படி பல விஷயங்களை நீர்த்து போக செய்யும் மாற்று விஷயம் (தந்திரம் என்பதே சரியான சொல்லாக இருக்கும்) பின்தள்ளப்பட்ட விஷயங்களை விட முதன்மையானதாக இருந்தால் நிகழ்வுகளின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் என்று முதன்மை பெறுகிறது என்று நமக்கு நாமே சால்ஜாப்பு சொல்லிக்கொண்டு நாட்களை கடத்தலாம்.

ஆனால் நீர்த்து போக செய்யப்படும் விஷயத்தை விட அதை நீர்த்து போக செய்யப்படும் விஷயம் சாதரணமாக இருந்தால் அதை என்னவென்று சொல்வது? அப்படி ஒரு விஷயம் தான் இப்போழுது நடந்து கொண்டிருக்கிறது.

அந்த சாதாரண விஷயத்தின் பெயர் தான் கிரிக்கெட்!!!!

கிரிக்கெட் என்ற சாதாரண ஒரு விளையாட்டு விஷயத்தை முன்னிலைபடுத்தி பின்னுக்கு தள்ளப்பட்ட அல்லது நீர்த்து போக செய்யப்பட்ட விஷயங்கள் ஏராளம்.

ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியின் மரணம் , தமிழகத்தில் ஒரு அரசு ஊழியரின் மரணம் , ட்ராபிக் ராமசாமி என்கின்ற சர்வதேச பயங்கரவாதியின் (அவர்கள் பார்வையில் ) கைது , தேசத்தை விற்று காசாக்கி கோட்டு சூட்டு போட்டுக்கொள்ள துடிக்கும் ஆட்சியாளர்களின் நிலம் கையகபடுத்தும் சட்டம், மாட்டுக்கறிக்கு எதிரான மாங்கா மடையர்களின் சட்டம்  என அடுக்கி கொண்டே போகலாம்.

இந்த மாத இறுதிக்கு பிறகு கண்ணையும் அறிவையும் உலக நிகழ்வுகளையும் மறக்கடிக்க செய்த உலக கோப்பை கிரிக்கெட் என்கின்ற மாயை முடிவுக்கு வரும்பொழுதே ஐபிஎல் என்னும் அடுத்த சூழ்ச்சி கண்ணை மறக்க தயாராகி நிற்கிறது.

நடக்கட்டும் பார்க்கலாம்....நானும் சேர்ந்து பார்க்கிறேன்.

செவ்வாய், 17 மார்ச், 2015

இந்தியா கிரிக்கெட்டும், திருந்தாத கிறுக்கர்களும்

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பது இன்றைய தலைமுறை மறந்திருக்கும். ஆனால் உண்மை என்னவென்றால் அது மறக்கடிக்கப்பட்டிருக்கு என்பதுதான்.

உலகில் இன்று பல நாடுகள் கிரிக்கெட்டில் கால்பதிக்க துவங்கிவிட்டன ஆனால் அப்படி ஒன்றும் பெரிதாக சாதிக்க முடியவில்லை. இந்த கிரிக்கெட்டில் உண்மையிலேயே ரொம்ப விறுவிறுப்பான போட்டி என்னவென்றால் அது ஆஸ்திரேலியா அணியினருக்கும் இங்கிலாந்து அணியினருக்கும் இடையே நடக்கும் ஆஷஸ் என்னும் போட்டிதான். இது தான் ரொம்ப உணர்வுபூர்வமா இருக்கும். ஆனால் பாருங்க இந்தியாக்கும் பாகிஸ்தானுக்கும் நடப்பதுதான் ரொம்ப உணர்வுப்பூர்வமானது போல காட்டுவாங்க.

மக்களின் பகைமை உணர்வை தூண்டிவிட்டு  அதில் பணம்ப்பார்க்கும் ஒரு மாணம்கெட்ட பிறவிகள்....!!!!!!!!!

 நீங்க நல்லா ஒரு விஷயத்தை கவனித்தால் விளங்கும் இவர்கள் எப்படி எல்லாம் மக்களின் உணர்வுகளோடு விளையாடுகிறார்கள் என்று, இவர்களுக்கு எதிராக விளையாடும் எந்த அணியாக இருந்தாலும் அட அது ஒரு சப்பை அணியாக இருந்தாலும், இவர்களும் இவர்களின் முன்னோடிகளும் குடுப்பாங்க பாருங்க ஒரு பேட்டி ஆஹா அந்த சப்பை அணியை ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா அளவிர்க்கு பேசுவாங்க அது மட்டுமில்லை இவர்களுக்கு விளக்கு பிடிக்கும் மீடியா இருக்கே என்னமோ இவனே நேராப்போய் பேட்டி எடுத்த மாதிரி அந்த அணியின் தலைவர் அப்படி பேசினான், இப்படி பேசினான் அப்படி இப்படினு போட்டு அதை திருப்பி திருப்பி தனது செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பி பார்க்கின்ற மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு போட்டியை காணக்கூடிய நேரத்தில் இவர்கள் எதிரணியினரை வாய்க்கு வந்தப்படி திட்டுவதையும் நாம் கண்கூடாக பார்க்கின்றோம்.

 இவர்கள் இப்படி செய்வதால்தான் இந்தியா விளையாடும் எல்லாப்போட்டிகளும் போட்டியாக இல்லாமல் எல்லாம் வெறிப்பிடித்தது போல் ஆக்கப்படுகின்றது. மொத்தத்தில் இவர்கள் சம்பாதிக்க இவர்களின் எதிர் அணியினர் அவர்கள் யாராக இருந்தாலும் மிகப்பெரிய ஒரு எதிரியாக பார்க்கப்படுகிறார்கள் ஏன் அதையும் தாண்டி ஒரு துரோகியாக பார்க்கபடுகிறார்கள் கேட்டால் தேசப்பக்தியாம்.

 

உண்மையிலேயே உலகில் உள்ள நிறவெறி அதிகம் காண்பிக்கப்படுவது இந்தியாவில்தான் அதில் முதன்மை வகிப்பது இந்த கிரிக்கெட் மோகம். இப்படி மக்களின் பகைமை உணர்வை தூண்டிவிட்டு வேடிக்கைப்பாற்பதற்க்கு பதில் இதே போல வேடிக்கைப்பார்க்கின்ற தொழில் ஒன்று இருக்கு அதை செய்யலாம்...!!!!!!!!!!!!

 

புரிந்தவர்கள் புரிஞ்சிப்பாங்க.