OnlinePJ

Thanks for Visiting my Page

புதன், 25 ஏப்ரல், 2012

தமிழன்டா??????????????????



வணக்கம் தமிழகம்…
சும்மா சொல்லகூடாது…இடியட் பாக்ஸ்னு ஒரு பேரு இருக்கு டி.விக்கு அத விழுந்து விழுந்து பாக்குறதுல நாம தான் இந்தியாவிலேயே ரெண்டவது. நாம எல்லா டி.வியும் பார்போம்….ஒரு சேனல் குறையில்ல….ஆனா பாக்குறது மட்டும் பொழுதுபோக்கா இருக்கனும். எதாவது விஷயம் இருக்குற நிகழ்ச்சிய பார்த்தா அது பெரிய குற்றம்…சேனல்காரனுங்க பார்த்தானுங்க…உலகமே ஒப்பாரி வைச்சப்ப(அதாங்க இலங்கை மேட்டரு…நமக்கு எதுக்கு அதெல்லாம்…) T.R.P ரேட்டிங்கல நம்ம மானட மயிலாட தான் டாப்பு.


இவ்வளவு சொல்றேன்….நான் மட்டும் யோக்கியமா…நிச்சயம் இல்லை…அட நம்மள திருந்த விட்டாத்தானே…கொஞ்சமாவது யோசிக்கிற அளவு எந்த நிகழ்ச்சியும் இப்ப இல்லை…அப்படி போட்டாலும் அது பிரைம் டைம்ல இருக்காது…
ஒன்னு மட்டும் புரியுது…நமக்கு காட்டபடுறத மட்டுமே பாக்க பழகிட்டோம்… அதை தாண்டி நாம கேக்குறதும் இல்ல அவங்களா நல்ல நிகழ்ச்சிகளை போடுறதும் இல்ல….
ஆனாலும் நம்ம முயற்சிய விடாம அடுத்த இடத்த பிடிப்போம்……அதாங்க No.1…….முதல்ல இந்திய…அப்பறம் உலகத்துல…
என்ன பாஸ் கொஞ்சம் சிரிங்க….சீரியஸ் ஆய்டாதீங்க…

திங்கள், 16 ஏப்ரல், 2012

துபாய் பேமிலி விசா - டேனன்சி காண்ட்ராக்ட் கண்டிப்பாக வேண்டும்,


 பலபேர் எண்ணத்தில் மண்ணை போட்ட, எண்ணை வள நாடு????????????

துபாயில் டேனன்சி காண்ட்ராக்ட் கண்டிப்பாக தேவை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குடும்பஸ்தர்கள் வயிற்றில் புளியை கரைக்கும் செய்திதான். பெரும்பாலும் துபையில் நம்ப ஆட்கள் sharing ப்ளாட்டில்தான் தங்கி இருக்கிறார்கள். இன்னும் பலபேர் தங்கள் மனைவி மக்களை அழைக்கலாம் என்று ஆர்வத்தில் உள்ளார்கள், அவர்களின் எண்ணத்தில் மண்ணை போட்ட மாதிரி இருக்கு இந்த செய்தி (ஏற்கனவே அவிங்களுக்கும் நமக்கு வாய்க்கா தகராறு) 
. --------------------------------------------------------------------------------
 UAE யில் உள்ள இந்தியன் ஸ்கூல்கள் அனைத்தும் ஜூலை முதல் வாரத்தில் இருந்து விடுமுறை அறிவித்துள்ளன. சீக்கிரம் டிக்கெட் போட்டுடுங்க. (சொர்கமே என்றாலும் அது நம்ம ஊற போல வருமா?????????)
-------------------------------------------------------------------------------- 

துபாயில் இந்த வருடம் மழை குறைவுதான். ஷார்ஜவிலும் அதே நிலைதான். கடந்த வெள்ளி  இரவு யாருக்கும் தெரியாமல் பெய்து விட்டு போனது. ஆனால் அபுதாபியில் சனிக்கிழமை நல்ல மழை பெய்து இருக்கிறது. 3.5 மீட்டர் வரை பெய்து இருக்கிறது. 
---------------------------------------------------------------------------------

வியாழன், 12 ஏப்ரல், 2012

நான் என்ன பாவம் செய்தேன் ????????

இந்த பிஞ்சுக்கு தெரியுமா தான் ஏன் தாக்கப்படுகின்றோம், ஏன் இறந்தோம் என்று? 


கடந்த ஆறாம் தேதி, குழந்தையை கடுமையாக அடித்து துன்புறுத்தியுள்ளார். குழந்தையின் உடம்பில் பல பகுதிகளில் சிகரெட்டால் சூடு வைத்துள்ளார். குழந்தை அலறி துடித்தது. அரக்கத்தனத்தை விடாத பரூக், குழந்தையின் முகத்தில், தொடர்ந்து கண்மூடித்தனமாக தன் கையினால் மாறி, மாறி குத்தியுள்ளார். இதை பார்த்த குழந்தையின் தாயார் ரேஷ்மா அலறி துடித்து, பேச்சு, மூச்சில்லாமல் இருந்த குழந்தையை, சிவாஜி நகர் பவுரிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கிருந்து வாணி விலாஸ் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக குழந்தையை எடுத்து சென்றனர். மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.குழந்தை மரணம்: டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதும், குழந்தைக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட வலிப்பு காரணமாக மாரடைப்பில் அப்ரின் மரணமடைந்ததாக டாக்டர்கள் கூறினர். தீவிர சிகிச்சை மேற்கொண்டதாகவும் டாக்டர்கள் கூறினர்.

இதையறிந்த ரேஷ்மாவின் கதறல், மருத்துவமனையை உலுக்கி எடுத்தது. குழந்தையின் தந்தை பாரூக், ஏற்கனவே கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. ரேஷ்மா கூறுகையில், ""என் குழந்தையை கொலை செய்த, என் கணவருக்கு மிகப்பெரிய தண்டனை கொடுக்க வேண்டும். பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும். அவரது தண்டனை, அவரை போல் தவறு செய்ய நினைப்பவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்,'' என, கதறியபடி கூறினார்

புதன், 11 ஏப்ரல், 2012

இந்தோனிசியாவில் பூகம்பம், பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை..........

 இந்தோனிசியாவில் பூகம்பம்,



சற்று நேரத்திற்கு முன்னர் இந்தோனிசியா, சுமத்திர தீவில் கடலில் 431  கிலோ மீட்டர் தொவில் ஏற்பட்ட பூகம்பம் ரிக்டர் ஸ்கேலில் 8.7  லாக பதிவாகியுள்ளது, இதை தொடர்ந்து, இந்திய, இலங்கை உட்பட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது, 

இதன் அதிர்வை தமிழகத்தில் பரவலாக உணரப்பட்டது என தெரிய வந்துள்ளது...........

சென்னை மண்ணடியில் நில நடுக்கம் உணரப்பட்டது அலுவளகத்தில் வேலை செய்து கொண்டு இருந்த பெண்களுக்கு மயக்கம் ஏற்ப்பட்டது. பீதியில் அனைவரும் கட்டிடங்களை விட்டு வெளியேறி நின்ற காட்சி இனைக்கபட்டுள்ளது.

இறைவனின் எச்சரிக்கை இது என்பதை உணர்ந்து செயல்படுவோம். 

சென்னை சுற்றுவட்டாரத்தை தவிற வேறு எங்கும் நில நடுக்கம் உணரபடவில்லை. இது சுமத்திரா தீவில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தின் எதிரோலி என்று புதிய தலைமுறை செய்தி தொலைகாட்சி தெரிவித்துள்ளது.

நான் அலுவளகத்தில் அமர்ந்து கொண்டு இருந்த போது எனது Wheel Chair என்னை பின் நோக்கி தள்ளியதை அனைவரும் நன்றாக உணர்ந்தோம்.


இந்த முறை கடந்த 2004  அம ஆண்டு ஏற்பட்டதை போல ஆகாமல் இருக்க இறைவனை பிராத்திப்போம்...................

புதன், 4 ஏப்ரல், 2012


என் நெஞ்ச்சை நெருடிய ஒரு வீடியோ!!!!!!!!!!!!!!!!

நேற்று நான் எனது முகபுத்தகத்தில் நண்பர் ஒருவர் சேர் பண்ணிய வீடியோவை கண்டேன், அது என்னை நிலை குலைய வைத்தது என்றால் அது மிகையாகாது.

அந்த வீடியோவில் ஒரு வயதான தந்தை மற்றும் அவருடைய மகன் இருவரும் அவர்கள் வீட்டு முன் உள்ள பூங்கா பெஞ்சில் அமர்திருப்பார்கள், அப்பொழுது அங்கே ஒரு சிட்டுக்குருவி வரும் அதை பார்த்து அந்த வயதான தந்தை மகனிடம் கேட்பார் அந்த உரையாடல் இதோ:-

தந்தை:- மகனே, அது என்ன?
மகன்:- அது சிட்டுக்குருவிப்பா.

மீண்டும் சிறிது நேரம் கழித்து.........

தந்தை:- மகனே, அது என்ன?
மகன் (சற்றே கோபமுடன்);- இப்பதானே சொன்னேன் அது சிட்டுக்குருவிப்பா.

மீண்டும் சிறிது நேரம் கழித்து..

தந்தை:- அது என்ன?
மகன் (இதன் முறை மிகவும் கோபமுடன்):- நான் எத்தனை முறை சொல்றேன், நீ ஏன் திரும்ப திரும்ப அதையே கேட்குரே, கொஞ்சம் நேரம் சும்மா இருக்க மாட்டியா?

இப்படி கடுப்புடன் திட்ட உடனே அந்த தந்தை எழுந்து வீட்டினுள் போயி ஒரு டைரியை எடுத்துக்கிட்டு வருகிறார், பின்னர் அதில் ஒரு பக்கத்தை காட்டி படிக்க சொல்கிறார். அதில் இருந்த வார்தைகள் இதுதான்
“என் மகனுக்கு மூன்று வயதிருக்கும், அப்பொழுது நானும். அவனும் இதே பூங்காவில் அமர்திருந்தோம், இதே போல ஒரு சிட்டுக்குருவி வந்தது, அதை பார்த்த என் மகன் என்னிடம் 21 முறை அது என்னவென்று கேட்டான், நான் அத்தனை முறைக்கும் கொஞ்சம் கூட முகம் சுழிக்காமல், அது சிட்டுக்குருவி  என்று பதிலளித்தேன், ஒவ்வொரு முறையும் அவனை கட்டிபிடித்து பதிலளித்தேன்

இதை படித்தவுடன் அந்த மகன் குற்றவுணர்ச்சியுடன் தன் தந்தையை கட்டிபித்து அழுகிறார் இத்துடன் அந்த வீடியோ நிறைவுறுகிறது.

இந்த வீடியோ செயற்க்கையாக எடுக்கப்பட்டது என்றாலும், அதிலுள்ளது என்னவோ உண்மை. இன்று நாம் கண்கூடாக காண்கிறோம். நகரங்கள் மட்டும் என்றில்லை எல்லா இடங்களிலும் பிள்ளைகள் பெற்றோர்களை தவிக்கவிடுகின்றார்கள்.

நான் அனைவரையும் குறிப்பிடவில்லை, எப்படியும் ஒரு 40 சதவிகிதம் அப்படிதான் இருக்கின்றார்கள், அவர்கள் நேரடியாக இல்லை என்றாலும் மறைமுகமாக செய்கிறார்கள். இதில் எந்த மததவரும் நேர்மையாக இல்லை என்பதே நிதர்சன உண்மை.

அப்படி எல்லாம் இல்லை என்று நீங்கள் வாதாடினால், இன்றைக்கு தொழில்நுட்ப்பம் வளர்ச்சியடைவதை விட முதியோர் இல்லைங்கள் வளர்ச்சியடைகின்றது எதற்காக???????

உங்களிடம் விடையிருந்தால், பின்னூட்டமிடவும்.   

உங்களுக்காக அந்த வீடியோ லிங்க், http://www.videofy.me/u6jt8j3r/452047

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

இந்தியாவின் வல்லரசு கனவு, இந்திய மக்களின் அழிவு!!!!!!!!



குவலயத்தின் உயிர்களையெல்லாம் வெற்றி கொண்டு செழித்திருக்கும் மனித இனம் தன் கண்டுபிடிப்புகளால் தன்னைத் தானே அழித்துக்கொள்வதும் நடந்துகொண்டுதானிருக்கிறது. அவ்வாறான கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான் அணுஉலை. 1930ல் முதன்முதலில் அணுவின் கூறாக நியூட்ரான் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் அணுஉலைகள் தோன்றின. அணுவைப் பிளக்கும்போது கிடைக்கும் பேராற்றல் பேராசை கொண்ட மனிதனை ஈர்த்தது. 

பூமியில் கிடைக்கும் யுரேனியம்தோரியம்புளூட்டோனியம் ஆகிய தனிமங்களை அணுவில் செலுத்திப் பிளந்து அதன் மூலம் கிடைக்கும் ஆற்றலைக் கொண்டு நீரை ஆவியாக்கி அதன் மூலம் டர்பனைச் சுழற்றிஅதனோடு பொருத்தப்பட்டிருக்கும் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் தயாரிப்பதே அணு உலைகளின் செயல்பாடு. அவற்றில் பயன்படுத்தப்படும் தண்ணீரின் தன்மையைப் பொருத்தும்பயன்படுத்தும் முறை பொருத்தும் அணு உலைகளை நான்கு வகைகளாக பிரித்துள்ளனர் விஞ்ஞானிகள். 

அணு உலைகளின் கழிவுகளான யுரேனியத்தையும் புளூட்டோனியத்தையும் கொண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்கலாம்அணுகுண்டு தயாரிக்கலாம். வல்லரசு நாடுகள் இதையே செய்கின்றன. ஜப்பானில் வீசியது கூட இவ்வாறு செய்யப்பட்ட அணுகுண்டின் சக்தியை சோதித்துப் பார்க்கும் முயற்சிதான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த வல்லாண்மையில்தான் ஒளிந்துகொண்டுள்ளது இரகசியம். 

திங்கள், 2 ஏப்ரல், 2012


11.88 லட்சம் வீடுகளில் கேரளாவில் ஆட்களே இல்லை

யாருமே வசிக்காமல், கேரளாவில் 11 லட்சத்து 88 ஆயிரம் வீடுகள் பூட்டியே கிடக்கின்றன என, கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.


கேரளாவில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து, இயக்குனர் டாக்டர் வி.எம்.கோபாலமேனன் நிருபர்களிடம் கூறியதாவது: மாநிலத்தில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, கேரளாவில் 1 கோடியே 12 லட்சம் வீடுகள் உள்ளது தெரியவந்தது. கடந்த பத்தாண்டுகளில் மாநிலத்தில் வீடுகளின் எண்ணிக்கை 19.9 சதவீத வளர்ச்சி காணப்படுகிறது. மாநிலத்தில் கிராமப்புறங்களில் 58 லட்சத்து 57ஆயிரத்து 785 வீடுகளும், நகர்ப்புறங்களில் 53 லட்சத்து 60 ஆயிரத்து 68 வீடுகளும் உள்ளன. இதில், ஆள் நடமாட்டம் இல்லாது 11 லட்சத்து 88 ஆயிரத்து 144 வீடுகள் பூட்டியே கிடக்கின்றன. இதில் அதிகமாக, எர்ணாகுளம் நகரில் மொத்தமுள்ள 11 லட்சத்து 74 ஆயிரத்து 691 வீடுகளில், 1 லட்சத்து 36 ஆயிரத்து 722 வீடுகள் ஆட்கள் வசிக்காமல் பூட்டிக் கிடக்கின்றன.

இதற்கு அடுத்தப்படியாக, திருவனந்தபுரத்தில், 1 லட்சத்து 13 ஆயிரத்து 968 வீடுகள் காலியாக கிடக்கின்றன. மாநிலத்தில், 90 சதவீதம் வீடுகளில் வீட்டு உரிமையாளர்களே வசித்து வருகின்றனர். பத்து சதவீதம் வீடுகள் மட்டுமே குடியிருப்பு, வணிகம் போன்றவற்றிற்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில், வாடகை வீடுகள் அதிகளவில் எர்ணாகுளத்தில் உள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் திருவனந்தபுரம் உள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள வீடுகளில் 30 சதவீதம் வீடுகளில் நான்கு உறுப்பினர்கள் மட்டுமே வசிக்கின்றனர். ஆனால், ஒன்பது உறுப்பினர்களை கொண்ட அதிகளவு வீடுகள் மலப்புரம், காசர்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் காணப்படுகின்றன. மாநிலத்தில் 74.2 சதவீத வீடுகளில் வசிப்போருக்கு வங்கி கணக்கு வசதி உள்ளது. மேலும், 90 சதவீத வீடுகளில் தொலைபேசி வசதியும் உள்ளது.இவ்வாறு கோபாலமேனன் தெரிவித்தார்.

அப்போ இனிமேல தமிழ் நாட்டுல திருட்டு குறைஞ்சிடும்.................!!!!!!!!!!!!!!! வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு.......................அது நீங்க ஒட்டு போடுறதை பொறுத்துதான் irukku..............அங்குள்ள கட்சிக்கில்லை, என்னுடைய இந்த பதிவிற்கு...................

ஒரு மணிநேரம் மின்சாரமில்லாத உலகம்

Earth Hour : 


உலகம்  முழுவதும் கடந்த (மார்ச் 31) ம் திகதி மில்லியன் கணக்கான மக்கள் Earth Hour நிகழ்வை கொண்டாடினர். இரவு 8.30-9.30 மணி வரை ஒரு மணிநேரத்திற்கு உலகின் பல்வேறு நாடுகள் தமது முன்னணி சுற்றுலா தளங்கள், வர்த்தக கட்டிடங்கள் தமது மின்விளக்குகளை அணைத்து பூமியை குளிர்விக்க தங்களால் ஆன பங்களிப்பை வழங்கின.











ஆனால் பாருங்க இதுல நம்ம தமிழ்நாட்டு தாங்க ரொம்ப பூமியை குளிர வைக்கிறாங்க. உலகத்துல தமிழன் மட்டும்தாங்க வித்தியாசமானவன்............நீங்களே பாருங்களேன்..................




"THE GREAT TAMIL NADU" - JAYALALITHA ROCKS....................................... 


மக்கள் ரொம்ப பாவங்க!!!!!!!!!!!!!!!!!!!!!