OnlinePJ

Thanks for Visiting my Page

வியாழன், 29 மார்ச், 2012

உட்கார்ந்து யோசிச்சது


இந்த பதிவு சும்மா ஒரு தமாசுக்குதான், இதில் கருப்பு எழுத்தில் இருப்பதெல்லாம் முன்னர் நானே போட்ட பதிவு, அதற்க்கு சற்று எதிர்மறையாக யோசிச்சதுதான் இந்த சிகப்பு கலர் எழுத்துக்கள்...................மற்ற படி யார் மனதையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல 




1.    அரிசியின் விலை கிலோ 44 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக்கிடைக்கிறது.
a.     அரிசிய 44 ரூபாய் குடுத்து வாங்கினால் வெறும் 44 ரூபாய் மட்டும்தான், ஆனா பிரியா சிம் கார்ட் மட்டும்தான், டாக் டைம் நீதான் காசுகுடுத்து பண்ணனும், முட்டாள் மாதிரி பேசுறே!!!!!!!!!!!!
2.     பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.
a.     பொது விநியோகதில் 1 ரூபாய் குடுத்து அரிசிவாங்கினால ஒரு ஆறுமுறை கழுவினால் சுத்தமாகிடும், ஆனா பொதுக்கழிப்பறை அப்படியா (கொய்யாலே நாத்தாம் குடலை  புடுங்குது சொல்லரோமே, அதை எல்லாம் சுத்தம் செய்யதான்)
3.     வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.
a.     வாகனத்தை விட இப்ப படிப்பிற்க்கு ஆகும் செலவுதான் அதிகம்டா வெண்ணை!!
4.    பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது    பாதி நேரத்தில்கூட ஆம்புலன்சும், 
தீயணைப்பு  வாகனங்களும் வந்து சேர்வதில்லை!.
a.    பிஸ்ஸாவை அவன் பைக்லே எடுத்துக்கிட்டு சந்து போந்து எல்லாம் பூந்து வருவான், ஏண்டா மூதேவி ஆம்புஓன்சையும், தீயணைப்பு வண்டியையும் சந்துல கொண்டு வந்தால் எல்லோருக்கும் சங்கூத வேண்டியதுதான்.
5.       ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்குவாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அறப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!
6.       நாம் அணியும் உள்ளாடைகளும், ஆடைகளும், காலணிகளும்குளிரூட்டப்பெற்ற கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.
b.    சரி காய்கறியை குளிரூட்டப்பட்ட கடையில் வைக்கிறோம்ன்னு வை, ஒரு கிலோ தக்காளி 1000 ரூபாய் விற்க்கும், வாங்கி தின்பியா. இப்பவெல்லாம் வெளிநாடுகளில் மட்டும் என்று இல்லை சென்னையிலேயே காய்கறிகளில் சூபர் மார்க்கெட்டில் குளிரூட்டப்பட்ட இடத்தில்தான் இருக்கு, பயபுல்லை உழவர் சந்தையை பார்துட்டு பேசுரான்னு நினைக்கிறேன்.
7.       நாம் குடிக்கும் லெமன் ஜீஸ்கள் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுகிறது.
c.     உன்னை யாருயா அதை வாங்கி குடிக்க சொன்னது, நீ கடையிலே லெமென் வாங்கி நீயே ஜூஸ் பிழிந்து குடிக்க வேண்டியதுதானே, உன் சோம்பேறிதானதுக்கு அவிங்களா காரணம்.
8.       மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு,சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்றுகல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
d.    இந்த ரெண்டுலேயும் வித்தியாசம் கிடையாது, இந்த இரந்துல எதை அரசு நடத்தினாலும் அதில் முக்கிய பங்கு வகிப்பது பணம்தான்...........படிப்பெல்லாம் இப்ப ஒரு மாட்டாரே இல்லை

புதன், 28 மார்ச், 2012

இன்வேர்டார் ஒரு சிறந்த தேர்வு !!!!!!!!!!!!!!!!


கண்டிப்பாக தபோதைய தமிழக மின்சார தட்டுபாட்டிர்க்கான ஒரே வழி!!!!!!!!!!!!!!!




மின்சார தட்டுப்பாடு தமிழகத்தில் தலைவிரித்தாடும் இச்சமயத்தில்இன்வெர்ட்டர்களை  விற்கும் நிறுவனங்களும்,வியாபாரிகளும் சந்தோஷத்தில் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம்ஒரு மாதத்தில் 15இன்வெர்ட்டர்களே விற்பனையான கடையில்இன்று ஐநூறுக்கும் மேற்பட்ட இன்வெர்ட்டர்கள் விற்பனையாகிறது.
இந்நிலையில் புதிதாக இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்னஏற்கெனவே வைத்திருப்பவர்கள் அதை எப்படி பராமரிப்பது என்பது குறித்து என்பதை பார்போம்.
 
''ன்வெர்ட்டர்களில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்றுசைன் வேவ் இன்வெர்ட்டர். இரண்டாவதுஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர். இந்த இரண்டு வகையிலும் குறைந்த பட்சம் 250வாட்ஸ், 400 வாட்ஸ் என இரண்டு வகை உண்டு. 250வாட்ஸில்ஒரு விளக்குஒரு ஃபேன் இயங்கும். 400 வாட்ஸில் இரண்டு விளக்குஇரண்டு ஃபேன் இயங்கும்.
 
இந்த இரண்டுமே பெரும்பாலும் இப்போது நடைமுறையில் இல்லை. இப்போது இருப்பது 650 வாட்ஸ் இன்வெர்ட்டர்கள்தான். இதில் ஒரு ஃபேன்ஒரு விளக்குஒரு டி.வி. இயங்கும். 850வாட்ஸ் கொண்ட இன்வெர்ட்டர்தான் நடுத்தர மக்களுக்கும்,சிறுதொழில் செய்பவர்களுக்கும்  அதிகம் பயன்படும். இன்றையநிலையில் அதிகம் விற்பனை ஆகக்கூடிய இன்வெர்ட்டரும் இதுதான். இதில் ஐந்து விளக்குகள்நாலு ஃபேன் அல்லது டி.வி. அல்லது கம்ப்யூட்டர் அல்லது மிக்ஸியை இயக்கலாம்.  
 
பொதுவாக இன்வெர்ட்டர்கள் எல்லாமே தானாக இயங்குபவை என்பதால்மின்சாரம் தடைபட்டவுடன் இயங்க ஆரம்பித்துவிடும். மின்சாரம் வந்ததும் அதன் இயக்கம் தானாகவே நின்று விடும். இன்வெர்ட்டரில் சார்ஜ் குறைந்துவிட்டால்மின்சாரத் திலிருந்து அதுவாகவே சார்ஜ் ஆகிக் கொள்ளும். இதனால் இன்வெர்ட்டர்,பேட்டரி இரண்டையுமே கரன்ட் கனெக்ஷனில்தான் வைத்திருக்க வேண்டும்'' என்றவர்இன்வெர்ட்டர் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டார்.
 
கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
 
தேவைக்குத் தகுந்தபடி இன்வெர்ட்டர் மாடல்களை தேர்வு செய்ய வேண்டும்.  

மூன்று மணி நேரம் கரன்ட் கட் ஆகிற பகுதிகளில்அதற்கு ஏற்றார்போல மின்சாரத்தை சேமிக்கக் கூடிய பேட்டரிகளை தேர்வு செய்வது நல்லது.

இன்வெர்ட்டருக்கு அதிக டிமாண்ட் நிலவும் இச்சமயத்தில் இன்வெர்ட்டருக்கான பேட்டரி என்று சொல்லிவேறு ஏதாவது ஒரு பேட்டரியை நம் தலையில் கட்டிவிட வாய்ப்பிருக்கிறது. எனவேகவனமாக இருப்பது அவசியம்.  

நீண்ட காலமாக இன்வெர்ட்டர் தயாரித்து வரும் நிறுவனங்களின் இன்வெர்ட்டர் மற்றும் பேட்டரிகளை வாங்கலாம்.  

இன்வெர்ட்டர் வாங்கும் போது அந்த நிறுவனத்தின் சர்வீஸ் எப்படி இருக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்கள் வாங்குவதைவிட சைன்வேவ் இன்வெர்ட்டர்களை வாங்குவது நல்லது. ஏனெனில்,சைன்வேவ் இன்வெர்ட்டர் நம் வீட்டுக்குத் தேவையான அளவுமின்சாரத்தை முழுமையாகத்  தரும். இதனால்எலெக்ட்ரானிக் பொருட்கள் கெட்டுப் போகாது. ஆனால்ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர்களை வாங்கி பயன்படுத்தும்போது ஃபேன்மிக்ஸி மாதிரியான எலெக்ட்ரானிக் பொருட்களில் இரைச்சலான சத்தம்வரும். இதனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் விரைவில் கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது.
 
பராமரிப்பது எப்படி?
 
இப்போது மின்தட்டுப்பாடு அதிகமிருந்தாலும்இந்த பிரச்னை இன்னும் சில மாதம் கழித்து கொஞ்சம் தணியலாம். அந்த சமயத்தில்இன்வெர்ட்டரை பூட்டிஅப்படி ஒரு ஓரத்தில் வைத்து விடக் கூடாது.  மாதம் ஒருமுறையேனும் கிடைக்கும்மின்சாரத்தை நிறுத்திவிட்டுஇன்வெட்டர் மின்சாரத்தைபயன்படுத்தினால் இன்வெட்டரும் பேட்டரியும் பழுதடையாமல் இருக்கும்.
 
பேட்டரியில் இருக்கும் டிஸ்டில்ட் வாட்டர் குறையும் பட்சத்தில்அதை கட்டாயம் நிரப்பி வைக்க வேண்டும். இதை செய்யாவிட்டால்இன்வெட்டர் இயங்காது. பேட்டரிகளில் டியூப்ளர் மற்றும் ஃப்ளாட் பிளேட்னு இரண்டு வகைஇருக்கிறது. இதில்  டியூப்ளர் பேட்டரி பயன்படுத்துவது நல்லது. இது நீண்ட காலத்துக்கு உழைக்கும். மற்ற பேட்டரிகளைவிட பராமரிப்புச் செலவும் குறைவுதான்'' என்றார்.
 
இன்வெர்ட்டர் பற்றிய அடிப்படை விஷயங்களைச் சொல்லிவிட்டோம். இனி இதை பின்பற்ற வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்!

துபையை தொடர்ந்து அபு தாபியிலும் மெட்ரோ!!!!!!!!!!!!!


அமீரகத்தில் துபையில் கடந்த 2009  ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று வரை வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கும் மெட்ரோ, இப்பொழுது அமீரகத்தின் தலைநகரான அபு தாபியிலும் அதற்க்கான ஆயத்த பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.



இந்த மெட்ரோ துபையை காட்டிலும் கூடுதலாக 131  km தூரத்திற்கு என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது. அபு தாபி துபையை விட சிறிய நகரம்தான் என்றாலும் இதனை சுற்றியுள்ள சிறிய ஊர்கள் அதிகம், அதனை முன்னிருத்திதான் இந்த ஏற்பாடு, மேலும் இங்கு பெருகி வரும் மக்கள் தொகையை கனகிளிட்டும் இந்த பணி துரிதபடுதபட்டுள்ளது. 

இந்த மெட்ரோ ப்ராஜெக்ட் இங்குள்ள முக்கிய இடங்களான Sowwah Island, Reem Island, Saadiyat Island, Yas Island, Abu Dhabi International Airport and Masdar, the Capital City District, Emerald Gateway, Zayed Sports City and Adnec. போன்றவைகளை இணைக்கும் வண்ணமாக செயல்படவுள்ளது. 


இதில் முதல் கட்டமாக 18km மெட்ரோவும், 40km tram வண்டியும் தொடங்கப்படவுள்ளது, அதாவது இது இங்குள்ள Central Station, North Island, Al Wahda, Adnec, and Zayed Sports City போன்றவைகளை இணைக்கும் எனவும் தெரிய வந்துள்ளது. 

இதனால் அபு தபி அரசிற்கு வருடத்திற்கு 3 .8 பில்லியன் டிராவல் டைம் செலவும், 102million பயண நேரமும் மிச்சமாகும் என்கின்றார்கள் அதிகாரிகள். 

இதனால் இங்கு வெளியாகும் கார்பன் மோனாக்சைட் 22050  ன் குறையும் என்றும் தெரியவருகிறது. இந்த முயற்சி 2016  ஆமாண்டு முடிவடையும்.

என்னதான் இந்த நாட்டில் மக்கள் அவதி பட்டாலும், இது போல  உண்மையிலேயே மக்களுக்காக செய்ய கூடிய ஒவ்வொரு செயலும் பாராட்டகூடியதே.................

துபாய் என்னதான் planned  நகரம் என்றாலும், அபு தபி well  planned  நகரம் என்பதில் மாற்றுகருத்து இல்லை...............

திங்கள், 26 மார்ச், 2012

அமீரகத்தில் ஒரு மழைகாலம்...

நான் கடந்த வாரம் அமீரக மனபுயலை பற்றி, எனது பதிவில் எழுதினேன், அதனை தொடர்ந்து ஊரை சுத்த படுத்தும் விதமாக நேற்றிலிருந்து அமீரகத்தில் ஆங்காங்கே சிறிய அளவில் மழை தூறல்கள் விழுந்த வண்ணம் உள்ளன.............இன்றும் அமீரகத்தில் உள்ள அபு தாபியில் கொஞ்சம் நல்ல மழையும் பெய்தது.................இந்த வானிலை நாளை வரை தொடரும் என்று நம்ம ரமணி கூறவில்லை...........இங்குள்ள வானிலை அறிக்கை கூறுகின்றது...............இத்துடன் உங்களுக்காக சில புகைப்பட துளிகள்..............










புதன், 21 மார்ச், 2012

பங்களாதேஷ் அணியினருக்கு வாழ்த்துக்கள்...........

 வரலாறு படைத்தது

10 -வது முறையாக ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்ற பங்களாதேஷ் அணி, முதல் முறையாக இறுதிபோட்டியில் நுழைந்தது. இதற்க்கு காரணம் அவர்களின் அணி ஒற்றுமைதான்...............(Team Spirit)




சத்தத்தில் நூறாவது சதம் கண்டும், இந்திய அணி மன்னித்தான் கவ்வியது, தமிழர்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்த இலங்கை அணி தோற்க்கத்தான் வேண்டும்.



என்றைக்கும் உல் நாட்டில் மட்டும் நன்றாக விளையாடு இந்திய அணியை பாராட்டுவதை விட, என்றென்றும் போராடி கொண்டிருக்கும் வங்காளதேச அணியை பாராட்டுவதில் எந்த தப்புமில்லை..................

இறுதிபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...........!!!!!!!!!!!!!!!!!!!!!

செவ்வாய், 20 மார்ச், 2012

அமீரகத்தில் புயல்

என்னமோ தலைப்பை பார்த்தவுடன் ஏதோ தானே புயல் என்று நினைக்காதீங்க, அந்த புயல்ல கூட குளிக்காதவங்க நிறைய பேர் இருந்திருப்பாங்க ஆனா இந்த புயல்ல குளிக்காதவங்க இருக்கவே முடியாது, ஏன் தெரியுமா? இங்கே அடிப்பது மண் புயல் (என்ன அப்பா நாங்க குளிக்கமாட்டோம்னு ஒரு சிலர் சொல்லறது கேட்குது).

இதை பற்றி இங்கே 20  ௦ வருடத்திற்கு மேலாக வசிக்க கூடியவர்களிடம் கேட்டவரை, இது போல ஒரு மண் புயலை பார்த்ததில்லை என்கின்றனர். ஏன் நான் இங்கு வந்தே எட்டு வருடங்கள் ஆகின்றஹு நானும் இதுவரை இதுபோல பார்த்ததில்லை, ஏதோ என்னால முடிஞ்ச அளவு நான் எடுத்த போடோக்கள் உங்கள் பார்வைக்காக, போட்டோவில் அப்படியொன்றும் அதன் வீரியம் தெரியாது, மேலும் விபரங்களுக்கு உங்கள் நண்பர்கள் யாராவது இங்கிருந்தால் கேட்டுகொல்லுங்கள்







மேலும் சில செய்திகள்:-


  1. அபுதாபியில் ஆசியாவை சேர்ந்த ஒருவர் இங்குள்ள எடிசலாட் எனும் தொலைதொடர்பு அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவின் மேல் சந்தகப்பட்டு, அவரை உளவு பார்க்க தன்னுடைய லேப்டாப் காமெராவின் மூலம் படம் எடுத்துள்ளார், இதை அறிந்த அவருடைய மனைவி, தன கணவர் மேல் போலீசிடம் புகர் குடுத்து இப்பொழுது, இவர் சிறையில் உள்ளார்? இது தேவையா???
  2. அபுதாபியில் அத்தியாவசிய பொருட்களின் விலை தார்மாரக உயர்ந்துள்ளது என்று ஒரு கணக்கீடு கூறுகின்றது, அது எந்த அளவிற்க்கேன்றால், ஆண்டு 2010 -இல் ஒருவர் தான் வாங்கும் சம்பளத்தில் தனது அத்தியாவசிய பொருட்களுக்கென்று 16 .6  சதவிகிதம் செலவிட்டார, ஆனால் இன்று 2012 -இல் அது 23  சதவிகிதமாக ஏறியுள்ளது (எப்படி சிக்கியிருக்கும் பாருங்க) .
  3. இப்படி விளைஎற்றினாலும், இங்குள்ள அரசாங்கம், மக்களுக்கு குளிரூட்டப்பட்ட பெருந்துநிலயங்களை அமைத்து குடுத்திருக்கின்றது. அதனுடைய போடோக்கள் இதோ...........

இப்போதைக்கு இதுமாட்டும்தாங்க செய்தி..............மறக்காம உங்கள் கருத்துக்களை கூறிவிட்டு போங்க...............

திங்கள், 19 மார்ச், 2012

இப்படியும் ஒரு பைத்தியம்!!!!!!!!!




முன்னாடி எல்லாம் பார்தீங்கன்னா ஊருல எங்கேயாச்சும் பைத்தியங்கள் அலையும் ஆனால் இப்ப பார்த்தா எவன் பைத்தியம்ன்னே கண்டுபிடிக்க முடியலை. அதிலும் குறிப்பா இந்த கிரிக்கெட்டு பைத்தியங்கள் இருக்கே, சாத்தியமா ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் இவனுங்க கிட்ட.

இதை ஏன் சொல்றேனா, நேத்து நடந்து முடிந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான அணிகளுக்கிடையேயான போட்டியை காண ஒரு பைத்தியம் துபையில் உள்ள தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு போய் இருக்கிறான் என்றால் பாருங்கள் (எப்பூடி சிக்கி இருக்கான் பாருங்க).

இனி அவனை பற்றி கொஞ்சம்:-
ஜமான் கான், இவர் பாக்கிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சகிவல் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் துபையில் ஒரு கட்டிடம் கட்டும் ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவன் இந்தியா மற்றும் பாகிஸ்தான அணிகளுக்கிடையேயான போட்டியை காண தனது அலுவலகத்தில் விடுமுறைக்கு விண்ணப்பித்திருக்கிறான்  ஆனால் அவனது அலுவலகம் அதை மறுத்து விட்டனர். இதனால் கோபம் கொண்டு தனது பணியை ராஜினாமா செய்துவிட்டான். (எவ்வளவு பெரிய முட்டாள் செயல்).

இனி வேலை கிடைக்கும் வரை அவனது குடும்பத்தின் நிலை என்ன?

இது ஒரு பைத்தியக்கார தனம் என்றால், இதை விட ஒரு பைத்திய காரத்தனத்தை இங்கே துபையில் உள்ள ஒரு ரேடியோ அலைவரிசை ஒரு விளம்பரம் செய்தது, அதாவது இந்த போட்டியை காண இங்கே அமீரகதில் உள்ளவர்களுக்கு விடுமுறை வேண்டுமெனில், அவர்கள் அவர்களின் பாஸின் அலைபேசி என்னையும், அலுவலக பெயரையும் அவர்களுக்கு எஸ்‌எம்‌எஸ் அனுப்பினால் போதும், அவர்கள் விடுமுறை வாங்கி குடுப்பார்களாம், இது தேவையா? அப்படி சுமார் ஒரு மில்லியன் நபர்கள் விடுமுறையில் ஒரு நாள் சென்றால், இந்த நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்காதா? இதை விட அந்த பாலாய் போன கிரிக்கெட் ரொம்ப முக்கியமா?

இந்த கிரிக்கெட் மோகத்தால், நிறைய பேர் இன்று தனது நண்பர்களை கூட காண வருவதில்லை, பெற்றோர்கள், மனைவி, மற்றும் குழந்தைகளை கூட கவனிப்பதில்லை என்றால் அது மிகையாகாது.

பெண்களின் சீரியல் மோகம் கூட குறைந்துவிடும் ஆனால் இந்த பைத்தியங்களின் கிரிக்கெட் மோகம்?????????????????

ஞாயிறு, 18 மார்ச், 2012

முகபுத்தகத்தில்

இதெல்லாம் முகபுத்தகத்தில் இருந்து சுட்டது............கொஞ்சம் இல்லை, சிரிக்க நிறையவே இருக்கு...............