OnlinePJ

Thanks for Visiting my Page

திங்கள், 31 ஜனவரி, 2011

புலிகள் கொன்ற முஸ்லிம்களும், தமிழர்கள் தான்.................இதை சீமானும் சரி, தமீமும் சரி மறந்து விடாதீர்கள்.


முஸ்லிம்கள் அரசியல் களத்தில் இறங்காதவரை தங்களின் உரிமைகளை பெறமுடியாது என்ற கருத்தில் எந்த மறுப்பேதும் கிடையாது. த.மு.மு.க அரசியல் அரங்கில் கால் பதித்ததை மனமார வர வேற்கின்றோம். ஆனால் கடந்த ஜனவரி 16 அன்று திருச்சியில் நடைபெற்ற “அயோத்தி தீர்ப்பும் தேசிய அவமானமும்” என்ற கருத்தரங்கில் தேர்தலை மனதில் வைத்து பேசிய நாம்தமிழர் இயக்கத்தலைவர் சீமானும், மமக துணைப் பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரியும் தங்களின் எல்லையை மீறி பேசியதாகவே நமக்கு படுகின்றது. முதலில் அங்கு பேசிய பேச்சுக்களை த.மு.மு.க இணையத்தில் வந்ததை பார்ப்போம்.

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

உலகின் மிக உயர்ந்த செயற்கை நீருற்று

உலகின் மிக உயர்ந்த செயற்கை நீருற்று துபையில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீபாவிற்கு முன்னால்தான் அமைத்துள்ளது.
இதனுடைய நீளம் சுமார் 900 அடிக்கு மேல், அதில் எழும்புகின்ற நீரின் உயரம் சுமார் 500  ௦௦ அடிக்கு  மேல் என்கிறார்கள். அது எவ்வாறு இருக்குனு கீழே உள்ள படங்களை பார்த்து என்ஜாய் பண்ணுங்க.









எல்லாத்தையும் பார்த்துட்டு அப்படியே போய்டாதீங்க, உங்க கருத்துகளையும் அனுப்புங்க. 

மைக்ரோசாப்ட் வோர்ட் பாடம் - 4

வாசகர்களே, நாம் நிறைய செய்திதாள்களில் பார்த்திருப்போம் ஒரு செய்தியை சுருக்கி மூன்று காலத்தில் எழுத்திருபார்கள்  (உதாரணம் இணைப்பை பார்க்கவும்) அது போல நாம் இந்த வோர்டில் எவ்வாறு செய்யலாம் என்பதை பற்றியே இந்த பாடம் வாருங்கள் பயிலலாம் . முதலில் இங்கே கீழே இணைத்துள்ள இணைப்பை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

வெள்ளி, 28 ஜனவரி, 2011

குடிபோதையில் எங்கே செல்கிறோம் என்று தெரியாமல் விமானத்தை ஓட்டிய விமானி

குடிபோதையில் எங்கே செல்கிறோம் என்று தெரியாமல் விமானத்தை ஓட்டிய விமானி
லண்டன் : லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து கிளம்ப இருந்த விமானத்தின் விமானி அளவுக்கதிகமாக குடித்ததால் எங்கே ஓட்டி செல்கிறீர்கள் என்பதை மறந்த காரணத்தால் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானம் ஓட்டும் 49 வயது விமானி ஜார்ஜ் லா பெர்லீ அனுமதிக்கப்பட்ட அளவை விட 4 ½ மடங்கு அதிகமாக மது அருந்தி இருந்தார். எங்கே விமானத்தை ஓட்டி செல்ல போகிறீர்கள் என்று பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டதற்கு தான் நியூயார்க் செல்லவிருப்பதாக கூறினார். ஆனால் அவர் டெட்ராய்டுக்கு அவ்விமானத்தை ஓட்டி செல்ல வேண்டும்.
அமெரிக்க குடிமகனான லா பெர்லீ 20 வருடங்கள் விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஓட்டி செல்லவிருந்த விமானத்தில் மொத்தம் 241 பயணிகள் இருந்தனர். அவ்ரின் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு தண்டனை கொடுப்பதன் மூலம் இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தவிர்க்கலாம் என அரசு வழக்கறிஞர் வாதாடினார்.


Thanks.

http://ismailpno.blogspot.com

வியாழன், 27 ஜனவரி, 2011

சாஸ்திரி பவனா? சாகடிக்கிற பவனா?


இன்று ஏதாவது பதிவு போடலாம் என்று எண்ணியபோதுதான் எனக்கு இந்த தலைப்பில் பதிவு போடவேண்டும் என எண்ணினேன், கடந்த வருடம் நான் சாஸ்திரிபவனில் பட்ட அவஸ்தைகளை பற்றியதுதான் இந்த பதிவு.

புதன், 26 ஜனவரி, 2011

அமீரகத்தில் ஒரு குளிர் காலம்

வாசகர்களே, இந்த ஜனவரியில் , இங்கே அமீரகத்தில் மக்கள் எல்லோரும் குளிரை ரொம்பவே என்ஜாய் பண்றாங்க, நிறைய பேரு குடும்பத்தோடு விடுமுறைகளில் வெளியிலே பார்க், பீச்னு போறாங்க, அவர்களுக்கு சில டிப்ஸ்.

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

காஷ்மீர்: சவக்குழியின் சாட்சியங்கள்


 .  
காஷ்மீர்: இந்திய அரசின் படுகொலைகளும் சவக்குழியின் சாட்சியங்களும்

சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை! 

முன்னுரை

காஷ்மீர் : இந்திய அரசின் படுகொலைகளும் சவக்குழியின் சாட்சியங்களும் என்ற இவ்வெளியீட்டில் காஷ்மீரில் 1989 -2009ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்திய ராணுவ மற்றும் துணை ராணுவப் படையினரால் படுகொலை செய்யப்பட்டு அடையாளம் காணப்படாமல் புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டி எடுத்து, ஆய்வு செய்து காஷ்மீர் மீதான சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தினரால் வெளிக்கொணரப்பட்ட புதைக்கப்பட்ட சாட்சியங்கள்என்ற ஆய்வு அறிக்கையின் தமிழாக்கத்தை குடியுரிமை பாதுகாப்பு நடுவம் வெளியிட முன்வந்துள்ளது. 

வியாழன், 20 ஜனவரி, 2011

உட்கார்ந்து யோசிச்சது


நம்முடைய தமிழக முதல்வர் கருணாநிதி, அதிமுக ஜெயலலிதா, வைகோ இந்த மூன்று பெரும் ஒரு ஹெலிகாப்டேரில், தமிழகத்தை சுற்றி வருகிறார்கள், அப்பொழுது, கருணாநிதி சொல்லறார், நான் ஒரு நூறு ரூபாய் கீழே போட்டால், ஒரு தமிழன் சந்தோஷ படுவான், அதற்க்கு நம்ம வைகோ சொல்லுறார், நான் நூறு ரூபாய் போட்டால், ஒரு தமிழ் குடும்பம் ஒரு வேலை உணவு உண்பார்கள் என்கிறார், இதை எல்லாம் விட நம்ம ஜெயலலிதா சொல்லறார் நான் அந்த நூறு ரூபாயை நூறு ஒரு ரூபாயாக மாற்றி போட்டு நூறு தமிழனை சந்தோசபடுதுவேன்.

இந்த கொடுமை எல்லாம் தாங்க முடியமா அந்த விமானி உடனே சொல்லுறார், இப்ப உங்க மூணு போரையும் நான் கீழு தள்ளி விட்டால் மொத தமீழகதையும், நான் காப்ற்றிவிடுவேன், 
இது கேட்க சிரிப்பாக இருந்தாலும், தமிழக மக்களை காப்பத கூடிய பொறுப்பு நமக்கு இருக்கு அதனால நீங்க நம்ம கேப்டன் அவர்களுக்கு ஓட்டளித்து அவரை வெற்றி பெற செய்யும்மாறு கேட்டு கொள்கிறேன், அப்பதான் அவர் நடிக்க மாட்டாரு நம்ம மக்களை ஈசியா காப்பற்றிடலாம். 

என்னதான் கூகிள் மிகபெரிய search என்ஜின் என்றாலும், கோவில்ல காணாம போன செருப்பை கண்டுபிச்சு தரமுடியமா? போங்க பாஸ்.

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு, கொய்யாலே நம்ம கேப்டன் படத்தை பார்த்த அன்னைக்கே சாவு................

ஒரு சர்தார்ஜி ஒரு ஆட்டோகிராப் போக்கை பில் பண்ணிக்கிட்டு இருந்தார் அதிலே உள்ள zodiac அப்படிங்கிறதுக்கு அர்த்தம் அவருக்கு தெரியலை, உடனே பின் பக்கத்தை புரட்டி பார்த்தார் அதிலே ஒருத்தர் அந்த இடத்திலே "CANCER " அப்படின்னு எழுதி இருந்தார் உடனே இந்த சர்தார்ஜி இவர் பக்கத்துல KIDNEY FAILURE அப்படின்னு எழுதிட்டாடு,..பயபுள்ள எப்படி யோசிகிராங்கயா. 

நம்ம இந்தியன் கிரிக்கெட் அணியினருக்கு இங்கிலீஷ் சரியாக வராது என்பதற்கு ஒரு சரியான உதாரணம் ஒரு நிபருக்கும், நம்ம தொனிக்கும் ஆங்கிலத்தில் நடந்த உரையாடல் தமிழில் கீழு படியுங்கள்:
நிருபர்: சொல்லுங்க தோணி, உங்க மனைவி முழுகாம இருக்காங்களாமே, 
தோணி: ஆமாம்,  எல்லா புகழும் நம்ம பசங்களைத்தான் சேரும், எல்லோரும் ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சாங்க அதிலும் முக்கியமா நம்ம யுவராஜ், அது ஒரு கஷ்டமான் நிலைமை, அந்த நிலையிலும் யுவராஜோட பெர்போர்மன்சே சான்சே இல்லை? அவுனுடை இந்த திறமையை பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் நிச்சயம் என்ஜாய் பன்னிருப்பார்கள். 
நிருபர்: ????????????????

காதல் கல்யாணத்துக்கும், பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்க படும் கலயனுதுக்கு உள்ள வித்தியாசம்:
நிச்சயிக்க படும் திருமணம்: நீங்க நடந்து போகும்போது எதேச்சையாக ஒரு பாம்பு உங்களை கடிப்பது போன்றது
காதல் திருமணம: கொய்யாலே, நேரா பாம்புட்டே பொய் இந்த கடி கடி அப்படின்னு சொல்லுற மாதிரி. 

டீச்சர் : கடல் நடுவுல ஒரு மான்க மரமிருக்கு அதுல் உள்ள மாம்பழத்தை எப்படி பரிப்பே.
ஸ்டுடென்ட்: பறவை போல பறந்து பொய் பறிப்பேன்.
டீச்சர்: பறவை போல உன்னை எவன் படைச்சான்?
ஸ்டுடென்ட்: கடல் நடுவுல மரத்தை என்ன உங்க அப்பனா வெச்சான்.
டீச்சர்  சாக்ஸ் , ஸ்டுடென்ட் ராக்ஸ் 

விஜய், சந்தானம், டைரக்டர் இந்த மூன்று பெரும் விவாதம் பண்றாங்க,

டைரக்டர்: உங்களுக்கு எந்த மாதிர் படம் பண்ணனும்
விஜய்: அப்படி கேளுங்க, டெய்லி ஓடனும், நல்லா ஓடனும், வருஷம் புல்லா ஓடனும், .......
சந்தானம்: அதுக்கு நீ மவுண்ட் ரோட்லதான் ஓடனும். 
சந்தானம் ராக்ஸ் 

பெட்ரோல் விலை:பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்! சிறப்பு ஆய்வு கட்டுரை!

மோட்டார் வாகனம் பயன்படுத்வோர் மட்டுமல்லாது இன்றைக்கு நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை அனைவரும் பணத்தை பரிகொடுத்தவர்கள்போன்று புலம்புவது”அடப்பாவிங்களா கேக்குரதுக்கு ஆள் இல்லன்னு பெட்ரொல் விலைய இஷ்டம் போல அளவே இல்லாம இப்படி கூட்டிக்கிட்கிட்டே போரானுங்களே” என்று தான்.
இதில் நாமும் விதிவிலக்கல்ல..

மைக்ரோசாப்ட் வோர்ட் பாடம்-3

இன்று நாம் மைக்ரோசாப்ட் வோர்டில் எவ்வாறு அட்டவணை அமைத்து, அதனை ஒழுங்கு படுத்துவது என்பதை பார்போம்.

புதன், 19 ஜனவரி, 2011

உண்மையான ஜனநாயகம்

இன்று இந்தியா பெயரளவில் ஜனநாயாக நாடாக திகழ்ந்தாலும், உண்மையிலேயே இந்திய ஜனநாயகம் ஒரு உண்மையான ஜனநாயகமில்லை, இதை பற்றி அறிய கீழே உள்ள விடியோவை பார்க்கவும்.

திங்கள், 17 ஜனவரி, 2011

ஏஞ்சல் பால்ஸ் - உலகிலேயே மிக அதிக உயரத்தில் இருந்து விழ கூடிய நீர்வீழ்ச்சி

ஏஞ்சல் நீர் வீழ்ச்சிதான் உலகிலேயே மிக உயரமான நீர் வீழ்ச்சி, இது வெனிசுலாவில் உள்ள கனைமா பார்க்கில் அமைந்துள்ளது, இதனுடைய உயரம் 979 மீட்டர் அதாவது 3212 அடி. இதனுடைய ஆழம் (அதாவது விழ கூடிய இடத்தின் ஆழம்) 807 மீட்டர் அதாவது 2647 அடி, இந்த அருவியானது 1993 நவம்பர் மாதம் 16 ம் தேதிதான், அமெரிக்க விமானி ஜிம்மி என்பவரால் எதேச்சையாக கண்டுபிடிக்க பட்டது, அது வரை இப்படியொரு அருவி அங்கு இருப்பதாக இந்த உலகம் அறிந்திருக்கவில்லை.   என்ன கேட்கவே அதிசயமா இருக்கா, அப்போ அதனுடைய படத்தையும் உள்ளே போய் பாருங்கள்.

சனி, 15 ஜனவரி, 2011

இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு!‏

ஊழல் செய்வதிலும் கணக்கு எடுக்க வேண்டாமா? எல்லாவற்றிலேயும் டாப் டென் பார்த்தாச்சு......இதிலும் பார்த்துவிடுவோம்.......
இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா... ரூ 80 லட்சம் கோடி! அதாவது ரூ 1.80 ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதோ அந்த ஊழலில் சில 'துளிகளை' இங்கே பார்க்கலாம்:

வியாழன், 13 ஜனவரி, 2011

இஸ்லாமிய சகோதரியிடம் இரண்டே கேள்விகள்??

Subject: fardha


www.tamizachi.com - ல் வந்த கவிதைகளில் தமிழச்சியால் எழுதப்பட்ட கவிதை இது

இதர்கான எனது பதில் அவர்கள் இணையதளத்திற்கு அனுப்பியுள்ளேன்...

இதோ...

இஸ்லாமிய சகோதரியிடம் இரண்டே கேள்விகள்??

புதன், 12 ஜனவரி, 2011

மைக்ரோசாப்ட் வோர்ட் பாடம் -2

பாராக்களை எவ்வாறு சீரமைப்பது, அழுகுபடுதுவது 
தாமதமாக பதிவு இடுவதற்கு மன்னிக்கவும், இன்று நாம் மைக்ரோசாப்ட் வோர்டில் எவ்வாறு பாராக்கள், வரிகள், போன்றவற்றிக்கு இடைவெளி அமைப்பது, எப்படி பாராக்களை சீரமைப்பது பற்றி காண்போம்.

செவ்வாய், 11 ஜனவரி, 2011

தெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய கருணாநிதி

கருணாநிதியின் தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம்80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம். 

தமிழக முஸ்லிமும், தமிழ் சினிமாவும்.

 இன்று தமிழ் சினிமாக்களில் முஸ்லிம்களை தீவிரவாதியாகவோ, கசாப்பு கடைகாரனாகவோ, சாம்பிராணி ஒடுபவனாகவோ இன்னும் எவ்வாறெல்லாம் கேவலபடுத்த முடியுமோ? அவ்வளவு கேவலப்டுதுகிறார்கள். கொஞ்ச நாட்களுக்கு முன் அம்பேத்கர் பற்றிய ஒரு திரைப்படம்  வெளிவந்தது.

சனி, 8 ஜனவரி, 2011

"புரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள்!" வந்ததும்... தந்ததும்... (புன்முறுவலுக்காக‌)!‏


புரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள்
1. மேசையை எப்போதும் களேபரமாக வைத்திருங்கள். ஐந்தாறு பைல்கள் திறந்து கிடக்க வேண்டும். நடுவில் பேனாவைத் திறந்து போட்டிருக்க வேண்டும். மேசையின் இழுப்பறைகள் பாதி திறந்திருக்க வேண்டும். சாவி தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்.
2. போனில் உரக்க பேசுங்கள். ஐ சிம்ப்ளி கேன்னாட் டாலரேட் தட்’,டுமாரோ வில் பீ டூ லேட்’, என்கிற மாதிரி வாக்கியங்களை அழுத்தம் திருத்தமாக உச்சரியுங்கள். ஆங்காங்கே கொஞ்சம் ஹிந்தி, மலையாளம் கலந்து பேசுவது குணச்சித்திரத்தை மேம்படுத்தும். எதிராளியைக் காய்ச்சி வடிகட்டுற மாதிரி பேசுங்கள். இதைச் செய்கிற போது எதிர் முனையில் போன் வைக்கப் பட்டுவிட்டது என்பதை நிச்சயித்துக் கொண்டு செய்வது உடம்புக்கு நல்லது.
3. அலுவலகத்துக்குள் எப்போது நடந்தாலும் ஏதோ தீ விபத்து நடந்து விட்டது மாதிரி வேகமாக நடங்கள். நீங்கள் போவது காண்டீனுக்கு மசால் வடை சாப்பிடவோ கூட இருக்கலாம்.
4. மேற்சொன்ன தீ விபத்து நடைகளின் போது கையில் எப்போதும் ஒரு பைலோ, ரிஜிச்தரோ வைத்திருங்கள். அது காலி பைலாகவோ, அந்த ரிஜிஸ்தர் உங்கள் மகனின் மேப் டிராயிங் நோட்டாகவோ கூட இருக்கலாம்.
5. சாயந்திரம் ஐந்தரைக்குப் பிறகு உங்கள் பாசின் கேபினுக்கு முன்னால் குறுக்கும் நெடுக்கும் சும்மாவாவது நடங்கள்.
6. ஒரு வேளை அவர் ஏற்கனவே கிளம்பியிருந்தால் அவர் நம்பருக்கு போன் செய்து உப்புப் பெறாத விஷயம் எதற்காவது ஐடியா கேளுங்கள். ஆர் யு ஸ்டில் இன் தி ஆபிஸ்?’ என்று கேட்க வையுங்கள். அதற்கு பதிலாக, யுஷுவலா கிளம்பற நேரமே இன்னம் வரல்லை சார் என்கிற ரீதியில் பதில் சொல்லுங்கள்.
முடிந்தால், ‘கேசவன் வேறே இன்னைக்கு வரல்லையா, நாளைக்கு ஆடிட் இருக்கே என்கிற மாதிரி யாரையாவது டிப்ளமேடிக்காக போட்டுக் கொடுங்கள்.
7. அடுத்த நாள் பாசுடன் பேசும் போது சம்பந்தமே இல்லாமல் நேத்து கூட சாயந்திரம் ஆறரை மணி இருக்கும், வெப் இந்தியா ஆளுங்க போன் பண்ணாங்க என்கிற மாதிரி அப்டேஷன்கள் கொடுங்கள். ஆறரை, ஏழு என்கிற இடங்களில் இழுத்து இழுத்து பேசுங்கள்.

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி: நாளொன்றுக்கு 25 ரூபாய் ஊக்கத் தொகையுடன் தொழில் பயிற்சி‏


கடலூர் : 

          கடலூர் மாவட்டத்தில் தொழில் திறன் பயிற்சியளித்து வேலைவாய்ப்பு வழங்க இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

              தொழில் திறன் பயிற்சி பெற 18 முதல் 35 வதுக்குட்பட்ட இளைஞர்களிடமிருந்து நாளொன்றுக்கு 25 ரூபாய் ஊக்கத் தொகையுடன் வெல்டர், எலக்ட்ரீஷியன், ஸ்டீல் பிட்டர், ஆட்டோ மொபைல் மெக்கானிக், ஏ.சி.ரெப்ரிஜிரேஷன் போன்ற பயிற்சிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

             தற்போது வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்படும் விருத்தாசலம், நல்லூர், மங்களூர், காட்டுமன்னார்கோவில் ஆகிய ஒன்றியங்களிலிருந்து விண்ணப்பிக்கத் தேவையில்லை. மற்ற ஒன்றியங்களில் தகுதி வாய்ந்த இளைஞர்கள், மகளிரிடமிருந்து முகவரி, கல்வித்தகுதி, வருமானச்சான்று, இருப்பிடச் சான்று, ஜாதிச்சான்று, புகைப்படம் போன்ற தகவல்களுடன் பயிற்சி பெற விரும்பும் தொழிலையும் குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம்.

           கடலூர் மாவட்டத்தில் பல்வேறு வேலைவாய்ப்புடன் இணைந்த தொழில் திறன் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு வழங்கிட பயிற்சி நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.போதியளவு கட்டமைப்பு, வசதியுள்ள நிறுவனங்கள், முக்கூட்டு ஒப்பந்தம், வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனம், நிதி வழங்கும் நிறுவனம்

பயிற்சி அளிக்க விருப்பமுள்ள நிறுவனங்கள் 

திட்ட அலுவலர்
மகளிர் திட்டம்
71 சீத்தாராம் நகர்
புதுப்பாளையம் மெயின்ரோடு
கடலூர். 

             என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 7 ஜனவரி, 2011

தி பேங்க் ஜாப்

கடந்த 2009 ஆம் ஹாலிவூடில் தி பேங்க் ஜாப் என்கின்ற படம் வெளியானது, அது ஒரு பேங்கை கொள்ளையடிப்பதை  சுற்றி நிகழும் கதை களமாக அமைந்து இருந்தது, அதே படம் தமிழில் நாணயம் என்கின்ற பெயரில் வெளிவந்தது, இந்த படத்தில் நடகின்ற சம்பவத்தை மையமாக வைத்து அதே போல ஒரு பேங்க் கொள்ளை இரண்டு தினங்களுக்கு முன் நடந்துள்ளது. அதை பற்றிய பதிவுதான் இது. 

வியாழன், 6 ஜனவரி, 2011

குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!



குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் இன்று செல்பேசியும் இடம் பெற்றுவிட்டது. அம்மாவுடைய போன், அப்பாவுடைய போன் மற்றும் மாமா, மாமிகள் வைத்திருக்கும் செல்போனை அந்தக் குழந்தைகள் வாங்கி பெரியவர்கள் பேசுவதுபோலவே காதில் வைத்து ஹலோசொல்வதை பெரும் பேறாகக் கருதி உள்ளம் மகிழ்வார்கள்.
என்னமா பேசுது பாரு; அதுல என்னென்ன ஆப்ஷன் இருக்குன்னு எனக்குத் தெரியாது. அதுக்கு நல்லா தெரியும்பெருமை பொங்க தன் பிள்ளை செல்போன் நோண்டுவதை பெற்றோர் ரசிப்பார்கள்.

குழந்தை முன் செய்யக் கூடாதவைகள்

 குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாதசொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால்அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம்.

புதன், 5 ஜனவரி, 2011

உங்கள் குழந்தையின் உணர்வைப் புரிந்து கொள்ளுங்கள்!


குழந்தைகளுக்கு வகைவகையான உணவுகளை ஆக்கித் தருகிறீர்கள். விதவிதமான உடைகளை வாங்கித் தருகிறீர்கள். இது போதுமா நிச்சயம் போதாது. குழந்தையின் மன உணர்வுகளைப் புரிந்துக்கொண்டு அதற்கேற்ப நாம் நடந்து கொள்ளவேண்டும். ஆனால் நாம் என்ன நினைக்கிறோம்?நம்முடைய இயல்புகளைப் புரிந்துக்கொண்டு அதற்குத் தகுந்தபடி குழந்தை இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம். இது தவறானது. குழந்தைகள் பெற்றோர்களிடம் பாதுகாப்பை மட்டுமல்லபரிவையும் எதிர்பார்க்கிறார்கள். அன்புடன் அக்கறையையும் தங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மையையும் எதிர்பார்க்கிறார்கள். உங்கள் குழந்தைகளை நீங்களே புரிந்து கொள்ளாவிட்டால் பின்பு யார் புரிந்து கொள்ளப் போகிறார்கள்அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்கும் தன்மை மனிதர்களிடம்காணப்படுகிற ஒரு விசேஷப் பண்பு. உங்கள் குழந்தை உங்கள் சக மனிதர்தான். அடிமைகளைப் போல அவர்களை நடத்தாமல் நண்பர்களிடம் நடந்து கொள்வதைப் போல நடந்து பாருங்கள். உங்கள் குழந்தை வளர்வதை உணர்வீர்கள்.

அன்னியப் பெண்ணுடன் கை குலுக்குதல்


இஸ்லாமிய சமுதாயத்தில் நுழைந்துள்ள அன்னிய பழக்கங்களில் இதுவும் ஒன்று. முஸ்லிம்கள் பல தவறான பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டனர். மார்க்கக் கட்டளைகளைப் புறக்கணித்து விட்டு மேற்கத்திய கலாச்சாரங்களை கண்மூடிப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அன்னியப் பெண்ணுடன் கை குலுக்கும் பழக்கமுடைய ஒருவரிடம் இது தவறானது என்ற மார்க்க கட்டளையை ஆதாரத்துடன் கூறினால் உடனே, நீங்கள் பழமைவாதிகள், சந்தேக எண்ணம் கொண்டவர்கள், உறவினர்களை பிரிப்பவர்கள்... என்றெல்லாம் முத்திரை குத்திவிடுகின்றார்.

சிறிய தந்தையின் மகள், பெரிய தந்தையின் மகள், மாமன் மகள், சகோதரரின் மனைவி...  போன்றோருடன் கை குலுக்குவது நம்முடைய சமுதாயத்தில் மிகவும் எளிதான செயலாகிவிட்டது. இச்செயலின் விபரீதங்களை மார்க்கக் கண்ணோட்டத்துடன் பார்ப்பார்களானால் நிச்சயமாக இவ்வாறு செய்யமாட்டார்கள்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணை தொடுவதை விட இரும்பு ஊசியால் தன்னுடைய தலையை காயப்படுத்திக் கொள்வது சிறந்ததாகும். (நூல்: தப்ரானீ)

நிச்சயமாக இது கையின் விபச்சாரம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: இரு கண்களும் விபச்சாரம் செய்கின்றன. இரு கைகளும் விபச்சாரம் செய்கின்றன. இரு கால்களும் விபச்சாரம் செய்கின்றன. இச்சை உறுப்பும் விபச்சாரம் செய்கிறது. (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி) நூல்: அஹமத்)

நபி(ஸல்)அவர்களை விட தூய உள்ளமுடையவர் இவ்வுலகில் யாரிருக்கமுடியும்? இவ்வாறிருக்க நபி(ஸல்)அவர்களே கூறுகிறார்கள்: நிச்சயமாக நான் பெண்களிடம் முஸாஃபஹா செய்ய -கைகுலுக்க- மாட்டேன். (அறிவிப்பவர்: உமைமா பின்த் ருகைகா(ரலி) நூல்: இப்னுமாஜா)

நிச்சயமாக நான் பெண்களின் கைகளை தொடமாட்டேன். (நூல்: தப்ரானீ)

ஆயிஷா(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நபி(ஸல்)அவர்களின் கை எந்தப் பெண்ணின் கையையும் ஒருபோதும் தொட்டது கிடையாது. உடன்படிக்கை கூட வார்த்தையின் மூலம்தான் செய்து கொண்டார்கள். (நூல்: முஸ்லிம்)

நற்குணமுள்ள மனைவிமார்களை நீ என்னுடைய சகோதரர்களிடம் முஸாஃபஹா செய்யாவிட்டால் தலாக் கூறிவிவேன்! என மிரட்டும் கணவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்! ஆண் அன்னியப் பெண்ணுடனோ, பெண் அன்னிய ஆணுடனோ முஸாஃபஹா செய்வது ஹராமாகும். அது கை உரை அணிந்து கொண்டோ, ஆடையால் கையை மறைத்துக் கொண்டோ முஸாஃபஹா செய்தாலும் சரியே!

செவ்வாய், 4 ஜனவரி, 2011

புத்தாண்டு கொண்டாட்டமும் உயிர் பலியும்

நான் இதே தலைப்பில் முன்னர் இட்ட இரண்டு பதிவுகளுக்கு மேலும் வலு கூட்டும் விதமாக இந்த பதிவு,

புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம். 17 வயது இளம்பெண் கற்பழித்துக் கொலை.


அன்பர்களே, நேற்று நான் புத்தாண்டு கொண்டடத்தின் அவலங்களை பற்றி எழுதி இருந்தேன், அதை நிருபிக்கும் வகையில், இன்று நான் ஒரு வலைப்பதில் கண்ட நியூஸ் இதோ உங்கள் பார்வைக்கு.  

திங்கள், 3 ஜனவரி, 2011

புத்தாண்டு கொண்டாட்டம்

என்னடா இவன்  புத்தாண்டை பற்றி புத்தாண்டு தினம் முடிந்தவுடன் எழுதுறான்னு யோசிகிறீங்களா? நல்லா யோசிங்க அதுக்கு முன்னே இங்கே கீழே உள்ளதை படிச்சுட்டு அப்புறமா ரூம் போட்டு யோசிங்க. 

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

உங்கள் குழந்தை மேதையாக வளர வேண்டுமா?

சின்ன வயது முதல உங்கள் குழந்தையை அறிவுள்ளதாக வளர்க்க முடியும்.எவ்வளவுக்கு எவ்வளவு சின்ன வயதிலேயே தொடங்க முடியுமோ,அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.

**
படிப்பை ஒரு விளையாட்டாகச் சொல்லிக் கொடுங்கள்.

**
தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரம் குழந்தையுடன் இருப்பது என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்

**
இரவுச் சாப்பாட்டின் போதுகுழந்தையின் வகுப்புப் பற்றியும்,பாடத்தைப் பற்றியும்,நண்பர்கள் பற்றியும் பேச்சுக் கொடுங்கள்.

**
அகராதியில் தினசரி ஒரு வார்த்தை கற்றுக் கொள்ளப் பழக்குங்கள்.

**
வெளியூருக்குப் போனால் அவ்வூர் இருக்கும் இடம், போகும் வழி பற்றி விளக்குங்கள்.

.**
குழந்தையை மனப்பூர்வமாகப் பாராட்டுங்கள்.மிகச் சிறிய சுலபமான விஷயத்திற்குப் பாராட்டுவது தவறு.

**
ஒரு புதிய விஷயத்தைக் குழந்தைக்குச் சொல்லித்தர வேண்டுமானால் ,அதற்குப் பழக்கமான வேறொன்றைக் காட்டி விளக்குங்கள்.

**
எங்காவது செல்லும் போது,வழியில் காணப்படும் அறிவிப்புப் பலகைகளுக்கு விளக்கம் கொடுங்கள்.

**
சாலை விதிகளைப் பற்றிச் சொல்லிக் கொடுங்கள்.

**
குழந்தையிடம் அடிக்கடி சொல் விளையாட்டு விளையாடுங்கள்.

**
ஓரிடத்துக்குப்போய் வந்த பின் அதைப்பற்றி வர்ணித்துப் பேசக் குழந்தையைக் கேளுங்கள்.

**
குழந்தைகளை அடக்காமல் ,நிறையக் கேள்விகேட்க இடம் கொடுக்க வேண்டியது அவசியம்.புரிகிற மாதிரி முழுமையாகப் பதில் கொடுங்கள்.

**
படிப்பது ஒரு சந்தோசமான விஷயம் என்பதை உங்கள் குழந்தை அறியும் வண்ணம் படியுங்கள்.
**முக்கியமாக குழந்தைகளை முடிந்த அளவு அடிப்பதை தவிர்த்து விடுங்கள், மிரட்டுங்கள் ஒரு அளவிற்கு, தயவு செய்து அடிக்காதீர்கள்.